Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இன்ஃபுளுவென்ஸா நோய்த் தொற்று அதிகரிப்பு - பள்ளிகள் மூடப்படுமா? - சுகாதாரத்துறை ஆலோசனை
தற்போதைய செய்திகள்

இன்ஃபுளுவென்ஸா நோய்த் தொற்று அதிகரிப்பு - பள்ளிகள் மூடப்படுமா? - சுகாதாரத்துறை ஆலோசனை

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.11-

மலேசியாவில் இன்ஃபுளுவென்ஸா நோய்த் தொற்று அதிகரித்து வருவதையடுத்து, பள்ளிகளைத் தற்காலிகமாக மூடுவது குறித்து சுகாதாரத்துறை, கல்வியமைச்சுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.

என்றாலும், கல்வி நிலையங்களை மூடுவது குறித்த இறுதி முடிவை, கல்வி அமைச்சே எடுக்கும் என்றும் சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள், பள்ளிக்கு வராமல் இருக்க வேண்டும். முகக் கவசம் அணிதல், கையைக் கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தாங்கள் அறிவுறுத்துவதாகவும் டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய கண்காணிப்பின்படி, 40-வது தொற்றியல் வாரம் வரையில் நாட்டில் மொத்தம் 97 இன்ஃபுளுவென்ஸா நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும், அவை “இன்ஃபுளுவென்ஸா போன்ற நோய்கள்” மற்றும் “தீவிர சுவாசப் பாதிப்பு” என வகைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு முறைமைகளின் மூலம் உறுதிச் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related News