கெடா மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம், அரிய மண் தனிமங்கள் திருடப்பட்டது தொடர்பில் புக்கிட் எங்காங் சிக், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கைது செய்யப்பட்ட சீன நாட்டுப் பிரஜை ஒருவரின் அடையாளத்தை வெளியிடும்படி கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூருக்கு உள்துறை அமைச்சர் டத்தோ செரி சைஃபுடின் நசுத்தியோன் சவால் விடுத்துள்ளார்.|
அந்த சீன நாட்டுப்பிரஜை, சுற்றுப்பயண விசா அனுமதியைப் பெற்று மலேசியாவிற்குள் நுழைந்துள்ளார். ஆனால், அந்த சீன நாட்டுப்பிரஜை, மந்திரி பெசார் கழகத்தில் வேலை செய்வதற்கான விசாவை எதற்காக பெற்றார் என்பதை சனூசி பதில் அளிக்க வேண்டும் என்று சைபுடின் கேட்டுக்கொண்டார்.
மந்திரி பெசார் கழகத்தில் வேலை செய்த அந்த சீன நாட்டுப்பிரஜை எதற்காக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பிடிபட்டார்? அவருக்கும் மந்திரி பெசார் சனூசிக்கும் என்ன தொடர்பு? பல லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள அரிய மண் தனிமங்கள் திருப்பட்ட விவகாரத்தில் தமக்கு தொடர்பு இல்லை என்று மந்திரி பெசார் சனூசி கூறிய போதிலும், அந்த சீன நாட்டுப்பிரஜைக்கும் மந்திரி பெசாருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சைபுடின் கேட்டுக்கொண்டார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது


