Jul 29, 2026
Thisaigal NewsYouTube
குழந்தையில் பாலியல் பலாத்காரம், ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

குழந்தையில் பாலியல் பலாத்காரம், ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

கோத்தா பாரு , ஜூலை 04-

11 மாதமே நிரம்பிய பெண் குழந்தையிடம் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக லோரி ஓட்டுநர் ஒருவர், கிளந்தான், கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

32 வயது மொஹமட் ஸுலழர் இப்ராஹிம் என்ற அந்த லோரி ஓட்டுநர் கடந்த ஜுன் 26 ஆம் தேதி, கோத்தா பாரு, பசீர் தும்புத் என்ற இடத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டு சிறார் குற்றவியல் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த ஆடவர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகைசெய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள அந்த நபருக்கு எதிராக தண்டனை விதிக்கப்படும் வரையில் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் அனுமதி மறுத்தது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்