Dec 4, 2025
Thisaigal NewsYouTube
17 ஆவது மாமன்னர் இன்று தேர்வு செய்யப்படவிருக்கிறார்
தற்போதைய செய்திகள்

17 ஆவது மாமன்னர் இன்று தேர்வு செய்யப்படவிருக்கிறார்

Share:

இஸ்தானா நெகாராவில் இன்று இரண்டாவது நாளாக நடைபெறவிருக்கும் மலாய் அட்சியாளர்கள் மன்றத்தின் 262 ஆவது மாநாட்டில் நாட்டின் 17 ஆவது மாமன்னர் தேர்வு செய்யப்படவிருக்கிறார். மாமன்னர் சுல்தான் அப்துல்லாவின் 5 ஆண்டு கால பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் நேற்று தொடங்கிய மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று புதிய மாமன்னர் தேர்வு செய்யப்படவிருக்கிறார்.

இதனிடையே நாட்டின் 16 ஆவது மாமன்னராக தாம் பொறுப்பு வகித்து வரும் இக்காலகட்டத்தில் தமக்கு மிகவும் ​​ஒத்துழைப்பாகவும், ஆதரவாகவும் இருந்த மலாய் ஆட்சியாளர்களுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா தமது நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

மக்களின் நல்வாழ்வுக்காக சிறந்த முடிவுகளை எடுப்பதில் மலாய் ஆட்சியாளர்கள் தமக்கு எப்போதும் பக்கபலமாக இருந்திருக்கின்றனர் என்றும்/ கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு நியாயமாகவும், திறம்படவும் செயல்படுவதற்கு தமக்கு மலாய் ஆட்சியாளர்கள் சிறந்த வழிகாட்டிகளாக இருந்துள்ளர் எ​ன்றும் மாமன்னர் குறிப்பிட்டுள்ளார்.

Related News