Oct 17, 2026
Thisaigal NewsYouTube

இசிஆர்எல் இரண்டாம் கட்டத்திட்டம் 2027 இல் பூர்த்தியாகும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இசிஆர்எல் இரண்டாம் கட்டத்திட்டம் 2027 இல் பூர்த்தியாகும்

கோலாலம்பூர், நவ.12-


கிழக்கு கரை மாநிலங்களையும், சிலாங்கூர், கோம்பாக்கையும் இணைக்கும் இசிஆர்எல் ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமான கோம்பாக்கிற்கும், கோலக்கிள்ளானுக்கும் இடையிலான இருப்புப்பாதை நிர்மாணிப்புத்திட்டம், 2027 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி பூர்த்தியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தாபாருவிற்கும், தற்போது நிர்மாணிப்பில் இருந்து வரும் கோம்பாக், ஒருங்கிணைந்த போக்குவரத்து டெர்மினலுக்கும் இடையிலான இசிஆர்எல் ரயில் திட்டம், அடுத்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முடிவுறும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முதலாவது திட்டம் முடிவுற்றவுடன், கோம்பாக் டெர்மினலையுயும், கோலக்கிள்ளான் ரயில் நிலையத்தையும் இணைக்கும் இசிஆர்எல் ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் தொடங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

இவ்விரு ரயில் இருப்புப்பாதைத் திட்டம் பூர்த்தியாகுமானால், கிளந்தான் கோத்தாபாருவிலிருந்து இசிஆர்எல் ரயில் புறப்படும் ஒருவர், கோம்பாக்கை வந்தடைந்தவுடன், அடுத்த கட்ட ரயிலில் சிலாங்கூர் கோலக்கிள்ளானை சென்றடைய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ECRL ரயில் திட்டத்தின் உள்கட்டமைப்பானது, கோத்தாபாருவையும், சிலாங்கூர் கோலக்கிள்ளானையும் இணைப்பதாகும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →