Dec 10, 2025
Thisaigal NewsYouTube
உள்ளூர் வீட்டுப் பணிப்பெண் துன்புறுத்தல்: தாயும் மகனும் கைது
தற்போதைய செய்திகள்

உள்ளூர் வீட்டுப் பணிப்பெண் துன்புறுத்தல்: தாயும் மகனும் கைது

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.08-

உள்ளூர் வீட்டுப் பணிப் பெண் ஒருவர் துன்புறுத்தப்பட்டது குறித்து கிடைக்கப் பெற்ற போலீஸ் புகாரைத் தொடர்ந்து தாயாரையும், மகனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள தாயாரையும் மகனையும் இன்று தொடங்கி நான்கு நாட்களுக்குத் தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியைப் போலீசார் பெற்றுள்ளதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் அரிஃபின் முகமட் நாசீர் தெரிவித்தார்.

இந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளும், வீட்டுப் பெண் பணியாளரை எவ்வாறு துன்புறுத்தினர் என்பது தொடர்பில் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

உடலில் கடுமையான காயங்களக்கு ஆளான அந்தப் பணிப்பெண், தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரின் உடல் நிலை சீராக உள்ளது என்று ஏசிபி நோர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட வீட்டில் அந்தப் பணிப் பெண், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படாமல் ஓர் அடிமைப் போல் வீட்டில் அடைத்து வைத்திருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தனது வீட்டு உரிமையாளரின் துன்புறுத்தலைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அண்டை வீட்டுக்காரரின் உதவியுடன் அந்தப் பணிப்பெண் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி அந்த வீட்டிலிருந்து தப்பி, போலீசில் புகார் செய்துள்ளார் என்று ஏசிபி நோர் தெரிவித்தார்.

Related News