Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சிசுவின் உடலை இரகசியமாக புதைத்த குற்றத்திற்காக பெண்ணுக்கு ஒருநாள் சிறை, வெ.5,000 அபராதம்
தற்போதைய செய்திகள்

சிசுவின் உடலை இரகசியமாக புதைத்த குற்றத்திற்காக பெண்ணுக்கு ஒருநாள் சிறை, வெ.5,000 அபராதம்

Share:

ஜொகூர் பாரு, ஜூன் 20-

இறந்து பிறந்த சிசுவின் உடலை வேண்டுமென்றே மறைக்கும் நோக்கில் யாருக்கும் தெரியாமல் மிக இரகசியமாக புதைத்த குற்றத்திற்காக பெண் ஒருவருக்கு ஒருநாள் சிறை மற்றும் 5,000 வெள்ளி அபராதம் விதிக்க ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

23 வயது நூர் அகிலா அஹ்மத் ஃபைரூஸ் ஜக்ரி என்ற அந்த பெண் மாஜிஸ்திரேட் A ஷார்மினி முன்னிலையில் நிறுத்தப்பட்டு அக்குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 318 ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த ஜனவரி 26 ஆம் தேதி மாலை 6 மணியளவில் ஜொகூர் பாரு அருகிலுள்ள தானா பெர்குபுரான் கம்போங் பெர்த்தானியான் மாசாய் -யில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்