Sep 27, 2026
Thisaigal NewsYouTube
"அந்த மூன்று யானைகளும் தைப்பிங் மிருகக்காட்சி சாலைக்கு சொந்தமானவையே" - ஆட்சிக்குழு உறுப்பினர் தகவல்
தற்போதைய செய்திகள்

"அந்த மூன்று யானைகளும் தைப்பிங் மிருகக்காட்சி சாலைக்கு சொந்தமானவையே" - ஆட்சிக்குழு உறுப்பினர் தகவல்

Share:

தைப்பிங் மிருகக்காட்சி சாலையைச் சேர்ந்த மூன்று யானைகளான தாரா, அமோய் மற்றும் கெலாட் ஆகியவை ஜப்பானின் தென்னோஜி உயிரியல் பூங்காவிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதில், எந்த ஒரு உரிமை மாற்றமோ அல்லது நிதி பரிவர்த்தனையோ இடம்பெறவில்லை என பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சான்ட்ரியா எங் தெரிவித்துள்ளார்.

மாநில சட்டசபையில் நேற்று அவர் உரையாற்றுகையில், இந்த யானைகள் தொடர்ந்து தைப்பிங் மிருகக்காட்சி சாலைக்கு சொந்தமானவையாகவே இருக்கும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

மேலும், தென்னோஜி உயிரியல் பூங்கா மற்றும் தைப்பிங் மிருகக்காட்சி சாலைக்கு இடையிலான கூட்டு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டதையும் சான்ட்ரியா எங் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த ஒத்துழைப்பு விலங்குகள் பாதுகாப்பு, நிபுணத்துவப் பகிர்வு மற்றும் பராமரிப்பு தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News