முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயருக்குக் கலங்கத்தை விளைவிப்பதற்காக விசாரணை என்ற போர்வையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வேண்டுமென்றே சதி வேலையில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அந்த ஆணையம் மறுத்துள்ளது.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் மீது இப்படி ஒரு அபாண்டமான பழியைச் சுமத்துவது அந்த ஆணையத்தின் தோற்றத்தைப் பாதிக்கச் செய்யும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
பெரிக்காத்தான் நேஷ்னல் ஆட்சியில், உள்துறை அமைச்சின் குத்தகைகளைப் பெறுவதற்கு, வர்த்தகர் ஒருப்வரிடமிருந்து ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி லஞ்சம் வாங்கியதாக டத்தோ ஶ்ரீ அந்தஸ்தைக் கொண்ட தொழிலதிபர் ஒருவர், நேற்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஜைனுடின் பெயர் தொடர்பு படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


