Dec 29, 2025
Thisaigal NewsYouTube
இந்திராகாந்திக்கு உதவுவதற்கு பாஸ் கட்சி முன்வந்தது
தற்போதைய செய்திகள்

இந்திராகாந்திக்கு உதவுவதற்கு பாஸ் கட்சி முன்வந்தது

Share:

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்.29-

முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியரான இந்திரா காந்திக்கும் அவரது மகள் பிரசன்னா டிக்‌ஷாவிற்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்தி, அவர்களை மீண்டும் ஒன்றிணைக்க உதவுவதாக பாஸ் கட்சியின் சுங்கை பூலோ தொகுதித் தலைவர் ஸாஹாருடின் முஹமட் இன்று அறிவித்துள்ளார்.

இது மதம் அல்லது சட்டம் சார்ந்த பிரச்சினை அல்ல. மாறாக, மனிதாபிமானம் மற்றும் தாய்மை உணர்வு சார்ந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு தாயிடமிருந்து குழந்தையைப் பிரிப்பதை இஸ்லாம் ஒரு போதும் நியாயப்படுத்தவில்லை என அவர் வலியுறுத்தினார்.

இந்திராகாந்தியை அவரது மகளுடன் மீண்டும் சேர்ப்பதற்கு ஒரு 'மத்தியஸ்தராக' செயல்படத் தான் தயாராக இருப்பதாக ஸாஹாருடின் தெரிவித்துள்ளார்.

பிரசன்னா டிக்‌ஷா அல்லது அவரது தந்தை முகமது ரிடுவான் அப்துல்லாவோ இந்த விஷயத்தில் தன்னைக் தொடர்பு கொண்டால், இரு தரப்பினருக்கும் இடையில் சந்திப்பை ஏற்பாடு செய்யத் தயாராக இருப்பதாக ஸாஹாருடின் கூறினார்.

இதற்காக தனது கைப்பேசி எண்ணான 019-351 4078 - யும் அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு, 11 மாதக் குழந்தையாக இருந்த போது பிரசன்னா டிக்‌ஷா, அவரது தந்தை கடத்திச் சென்றுள்ளார். தற்போது பிரசன்னாவிற்கு 17 வயதாகிறது. பல ஆண்டுகளாகச் சட்டப் போராட்டங்கள் நடந்தும், இதுவரை அவரது இருப்பிடம் கண்டறியப்படவில்லை. இதற்காக மானுட நீதிப் போராட்டத்தை இந்திராகாந்தி தொடங்கியுள்ளார்.

Related News