ஈப்போ, டிசம்பர்.27-
ஈப்போ, ஈப்போ கார்டன் அருகில் ஜாலான் தே கியான் சுவீ என்ற பகுதியில் இன்று ஒரு காரும், ஒரு மண்வாரி இயந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் ஒரு சிங்கப்பூரியர் மற்றும் இரண்டு சிறார்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.
முற்பகல் 11:34 மணியளவில் பேரா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், காரின் முன் மற்றும் பின் இருக்கைகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட ஒரு பெண்ணை ஸ்டிரச்சர் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட அந்தப் பெண்ணைத் தவிர, மற்ற ஐந்து பேருக்கும் லேசான காயங்களே ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஆறு பேரும் சிகிச்சைக்காக மருத்துவக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பயணித்த Mazda CX-5 வகை என்றும் கண்டறியப்பட்டதாக பேரா மாநில தீயணைப்பு மீட்புப்படை இடைக்கால துணை இயக்குநர் ஷாஸ்லீன் முஹமட் ஹனாஃபியா தெரிவித்தார்.








