Jun 29, 2026
Thisaigal NewsYouTube
போலி முதலீட்டு மோசடிகள்: ஒரே மாதத்தில் மலேசியர்கள் 115 மில்லியன் ரிங்கிட்டை இழந்த சோகம்
தற்போதைய செய்திகள்

போலி முதலீட்டு மோசடிகள்: ஒரே மாதத்தில் மலேசியர்கள் 115 மில்லியன் ரிங்கிட்டை இழந்த சோகம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.01-

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 787 போலி முதலீட்டு மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் சுமார் 115 மில்லியன் ரிங்கிட் இழப்பைச் சந்தித்துள்ளதாகவும் புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வழக்குகளின் எண்ணிக்கை 8 விழுக்காடு அதிகரித்துள்ள நிலையில், சமூக ஊடகங்களில் வரும் "இலவச முதலீட்டு வகுப்புகள்" அல்லது "அதிக ஆதாயம்" போன்ற விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா.

மோசடி கும்பல்கள் பெரும்பாலும் வங்கிக் கணக்கு வரி அல்லது கமிஷன் என்ற பெயரில் முன்பணம் கோருவதாகவும், அத்தகைய சந்தேகத்திற்குரிய பணப் பரிமாற்றங்களைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் ஏதேனும் பணப் பரிமாற்றம் செய்யும் முன் 'Semak Mule' தளத்தில் சரிபார்க்குமாறும், ஏமாற்றப்பட்டதை உணர்ந்தால் உடனடியாக 997 என்ற தேசிய மோசடி மறுமொழி மைய எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு