கோலாலம்பூர், ஜூலை.22-
மலேசிய மக்கள் அனுகூலம் பெறக்கூடிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இன்ப அதிர்ச்சி செய்தி, நாளை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருக்கிறது என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
நாளை காலை 10.30 மணிக்கு பிரதமர் இன்ப அதிர்ச்சிக்குரிய செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருக்கிறார் என்று ஊடகவியலாளர்களுக்கு இன்று அனுப்பிய குறுந்தகவலில் டத்தோ ஃபாமி தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே அது எத்தகைய இன்ப அதிர்ச்சிக்குரிய செய்தி என்பதை டத்தோ ஃபாமி விளக்கவில்லை. அதே வேளையில் அந்த அறிவிப்பு, பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்படுமா அல்லது ஓன் லைன் மூலம் பிரதமர் அறிப்பாரா? என்பதையும் டத்தோ ஃபாமி தெரிவிக்கவில்லை.








