Oct 15, 2026
Thisaigal NewsYouTube

RON95 பெட்ரோல் மானியத்தை மறுசீரமைக்கும் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
RON95 பெட்ரோல் மானியத்தை மறுசீரமைக்கும் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்

கோலாலம்பூர், ஜன.3-

RON95 பெட்ரோல் மானியத்தை மறுசீரமைக்கும் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று பொருளாதார அமைச்சர் Rafizi Ramli தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக, பெட்ரோல் நிலையங்களிலும், இரண்டாம் கட்டமாக, மானியம் பெறத் தகுதியானவர்களைக் கண்டறிவதிலும் கவனம் செலுத்தும். 85 விழுக்காடு மக்கள் மானியம் பெற தகுதியுடையவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

தகுதியை நிர்ணயம் செய்யும் பணி பொருளாதார அமைச்சால் மேற்கொள்ளப்படும். இதற்கான ஒப்புதலைப் பெற அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்படும். மேலும், முதன்மைத் தரவுத்தள அமைப்பான PADU வை மீண்டும் திறப்பதற்கான முன்மொழிவும் அமைச்சரவையில் விவாதிக்கப்படும். PADU வை மீண்டும் திறப்பது உட்பட பிற முடிவுகளையும் அடுத்த சில வாரங்களில் அமைச்சரவையால் எடுக்கப்படும்என் Rafizi Ramli குறிப்பிட்டார்.

கடந்த நவம்பரில், அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்த பின்னரே PADU பதிவின் இரண்டாம் கட்டம் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்று Rafizi கூறியிருந்தார். பொருளாதார அமைச்சும் நிதி அமைச்சும் தகுதி அளவுகோல்களை செம்மைப்படுத்தி வருகின்றன. 2025 வரவு செலவுத் திட்டத்தில், RON95 பெட்ரோல் மானியத்தை 2025 மத்தியில் மறுசீரமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருந்தார்.

மானிய மறுசீரமைப்பின் மூலம் கிடைக்கும் சேமிப்பு மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும். இந்த நடவடிக்கையால் 85 விழுக்காடு மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும், இதன் மூலம் அரசாங்கத்தால் 8 பில்லியன் ரிங்கிட் சேமிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இரண்டு கட்ட விலை நிர்ணய முறை சிறந்த வழி என்றும், இது பொருட்களின் விலை உயர்வை தடுக்கவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் உதவும் என்றும் ரஃபிஸி கூறியுள்ளார். எந்த முறையிலும் சில அபாயங்களும் சிக்கல்களும் உள்ளன என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்