ஜார்ஜ்டவுன், அக்டோபர்.11-
தாய்லாந்தில் வேலைக்காக சென்ற தனது மகன் காணாமல் போனதாக பெண் ஒருவர் அளித்துள்ள புகாரை பினாங்கு போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த மாதம் அவரது மகனைக் கடத்தி வைக்கப்பட்டிருப்பதாக அப்பெண்ணுக்கு வந்த மிரட்டல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ அஸிஸீ இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், அப்பெண் அளித்துள்ள புகாரில், அவரது மகன் சுய விருப்பத்துடன் தான் தாய்லாந்திற்கு வேலைக்குச் சென்றதாகவும், யாரும் அவரை வற்புறுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இருப்பதால், அந்த ஆடவரின் தாய்லாந்து பயணம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் திரட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அஸிஸீ இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.








