Jul 25, 2026
Thisaigal NewsYouTube
யாயாசான் அமால் மாடிகேர் நிதி திரட்டும் நிகழ்ச்சி: RM700,000 திரட்டப்பட்டது
தற்போதைய செய்திகள்

யாயாசான் அமால் மாடிகேர் நிதி திரட்டும் நிகழ்ச்சி: RM700,000 திரட்டப்பட்டது

Share:

நடுத்தர வர்க்கத்தினருக்குக் குறைந்த செலவில் தரமான மருத்துவச் சேவைகளை வழங்குவதற்காக இயங்கி வரும் 'யாயாசான் அமால் மாடிகேர்', தனது ஆண்டுதோறும் நிதி திரட்டும் நிகழ்வின் மூலம் சுமார் 700,000 ரிங்கிட் திரட்டியுள்ளது.

கோலாலம்பூரில் நடைபெற்ற 'ஏ நைட் ஒப் ஓப் அண்ட் ஹீலிங்: ஷைன் எ லைட், சேவ் எ லைஃப்' எனும் இந்த ஆண்டு நிதி திரட்டும் மாநாட்டின் போது, யாயாசான் அமால் மாடிகேர்-இன் தலைவர் துங்கு டத்தோ யாக்கூப் கைரா இந்தத் தகவலை வெளியிட்டார்.

திரட்டப்பட்ட இந்த நிதி, மானிய விலை டயாலிசிஸ் சிகிச்சைகள், இதய நோய் கண்டறியும் சேவைகள், இலவச மருத்துவமனைகள் மற்றும் சமூக அடிப்படையிலான நாள்பட்ட சிறுநீரக நோய் பரிசோதனைத் திட்டங்கள் போன்ற பல்வேறு நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அரசின் முழுமையான உதவிகளைப் பெற முடியாத அதேவேளையில், தனியார் மருத்துவமனைகளின் உயர் சிகிச்சைக் செலவுகளைத் தாங்க முடியாத நடுத்தர வர்க்கத்தினரின் சுமையைக் குறைப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் என்று துங்கு டத்தோ யாக்கூப் சுட்டிக்காட்டினார்.

யாயாசான் அமால் மாடிகேர்-இன் தலைமைச் செயல் அதிகாரி ஆனி ராஜசேகரன் கூறுகையில், கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, தற்போது 9 மாநிலங்களில் 11 டயாலிசிஸ் மையங்களை நடத்தி வருவதாகவும், இதுவரை சுமார் 770 தீவிர டயாலிசிஸ் நோயாளிகளுக்குச் சேவை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் துங்கு தெமெங்கோங் கெடா தான் ஸ்ரீ துங்கு புத்ரி இந்தான் சபிநாஸ் மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Related News