சிரம்பான், டிசம்பர்.19-
நெகிரி செம்பிலான், பெடாஸ் (Pedas) பகுதியில் ஒரு பாழடைந்த வீட்டின் பின்புறம் பையினுள் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 41 வயது ஆடவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை மாலையில் மலாக்காவில் அந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரை அடுத்த வாரம் வியாழக்கிழமை வரை ஏழு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உயிரிழந்தவர், சிலாங்கூர், அம்பாங்கில் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி முதல் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்ட 53 வயது பெண் சூரி நருடின் என நம்பப்படுகிறது.
அந்தப் பெண்ணின் உடல், பெடாஸ், கம்போங் பத்து 4 - டில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்தக் கொலைச் சம்பவம், குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.








