May 13, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் பன்றி பண்ணைகள் குடியிருப்பு, நீர் நிலைகளை விட்டு விலகி இருக்க வேண்டும் - ஃபஹ்மி ஃபட்சில் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் பன்றி பண்ணைகள் குடியிருப்பு, நீர் நிலைகளை விட்டு விலகி இருக்க வேண்டும் - ஃபஹ்மி ஃபட்சில் அறிவிப்பு

Share:

சிலாங்கூர் மாநிலத்தில் பன்றி வளர்ப்புப் பண்ணைகளானது, குடியிருப்பு பகுதிகள் மற்றும் முக்கிய நீர்வள ஆதாரங்களிலிருந்து தூரத்தில் அமைந்துள்ள பகுதிகளில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளரும், தொடர்புத் துறை அமைச்சருமான ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த விவகாரமானது விவாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அக்கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சிலாங்கூர் சுல்தானை சந்தித்தது குறித்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கு விளக்கமளித்ததாகவும், அச்சந்திப்பில் மந்திரி பெசார் அமிருடின் ஷாரியும் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், பன்றி பண்ணை உரிமையாளர்கள் கழிவுகள் மற்றும் மாசுபாட்டை முறையாக நிர்வகிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம், பன்றி கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் ஆற்று நீர் ஆதாரங்கள் மாசுபடுவது போன்ற சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, சிலாங்கூரில் பன்றி வளர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தாம் அனுமதி வழங்கப்போவதில்லை என்று சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷரபுதீன் இட்ரிஸ் ஷா அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News