கோலாலம்பூர், அக்டோபர்.07-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், நிதி அமைச்சர் என்ற முறையில் வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், தொழிலாளர்களின் வருமானம் அதிகரிக்கப்பட்டு, அவர்களுக்கான வாழ்க்கைச் செலவினங்கள் குறைய வேண்டும் என்று தேசிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கமான N.U.B.E.யின் பொதுச் செயலாளர் J. சோலமன் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து தொழிலாளர்களுக்கும் உரிய வாழ்க்கைத் தரத்தை உறுதிச் செய்யும் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என சோலமன் வலியுறுத்தினார். இத்தகைய சம்பள உயர்வு, எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்படாமல் வழங்கப்பட வேண்டுமே தவிர ஒருவரின் சேவை ஆற்றலை மையமாக வைத்து இருக்கக்கூடாது என்றார்.
ஒரு நிறுவனத்தின் நிதி நிலை எப்படி இருந்தாலும் அந்த தொழிலாளக்குரிய சம்பளம் அவரது வாழ்க்கைத் தரத்திற்கு உரியதாக இருக்க வேண்டும். B40, M40 மக்களுக்கான வீட்டுக் கடனில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று சோலமன் கேட்டுக் கொண்டார்.








