புத்ராஜெயா, ஜூலை.24-
கிள்ளான் பள்ளத்தாக்கில் பல்வேறு பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்திருந்த போதிலும் கோலசிலாங்கூரில் இன்று பிற்பகல் 3 மணி வரை காற்றின் தரம் சற்று மோசடைந்துள்ளது.
IPU எனும் காற்று மாசுப்பாட்டில் கோலசிலாங்கூர் பகுதி ஆரோக்கியமற்ற குறியீட்டைப் பதிவுச் செய்துள்ளதாக சுற்றுச்சூழல் தலைமை இயக்குநர் டத்தோ வான் அப்துல் லாதிஃப் வான் ஜாஃபார் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் இதரப் பகுதிகளில் 64 இடங்களில் காற்றின் தரம் மிதமாகப் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








