கோலாலம்பூர், அக்டோபர்.13-
ஹங் துவா மற்றும் புடு நிலையங்களுக்கு இடையிலான எல்ஆர்டி சேவை, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று திங்கட்கிழமை நிறுத்தப்பட்டுள்ளது.
அம்பாங்/ஶ்ரீ பெட்டாலிங் லைனில் சம்பந்தப்பட்ட நிலையங்களில், பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரெபிட் ரேல் சென்டிரியான் பெர்ஹாட் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளது.
அதே வேளையில், தடைபட்ட நிலையங்களுக்குப் பதிலாக மாற்று எல்ஆர்டி சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ரெபிட் ரேல் தெரிவித்துள்ளது.
பழுது காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கும் ரெபிட் ரேல் வருத்தம் தெரிவித்துள்ளது.








