Nov 6, 2025
Thisaigal NewsYouTube
தற்கொலை செய்து கொள்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை
தற்போதைய செய்திகள்

தற்கொலை செய்து கொள்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை

Share:

கூலிம், நவம்பர்.06-

கெடா, கூலிமில் தனது நான்கு வயது மகளை மூச்சடைக்க செய்து, கொன்ற பின்னர் தூக்கில் தொங்கி உயிரை மாய்ந்துக் கொண்ட தனித்து வாழும் தாயாரான துர்க்கா தேவி, இப்படியொரு முடிவைத் தேடிக் கொள்வார் என்று தங்கள் குடும்பத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை என்று அவரின் சகோதரி ஒருவர் தெரிவித்தார்.

தற்கொலைச் செய்து கொள்வதற்கான எந்தவோர் அறிகுறியும் துர்க்கா தேவியிடம் காண முடியவில்லை. இந்த துயரத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியத்தில் தற்போது தங்கள் குடும்பம் இருப்பதாக தன்னை சாரா என்று மட்டுமே அடையாளம் கூறிக் கொண்ட துர்க்கா தேவியின் 33 வயது சகோதரி தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்கிழமை இரவு, கூலிம், தாமான் பேரா, லோரோங் பேரா 3 இல் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவத்தில் துர்க்கா தேவியின் 7 வயது மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். அச்சிறுவன் தற்போது கூலிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

தங்கள் சகோதரி, துயரத்தில் அல்லது மனம் உடைந்த நிலையில் உள்ளார் என்பதற்கான சூழலைக் காண முடியவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற பின்னர் சுயகாலில் நின்று குடும்பத்தைக் கவனித்துக் கொண்டார். யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதவர். மன உறுதி மிக்கவும். சொந்த வீடு, சொந்த கார், பிள்ளைகளைத் தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார்.

தங்களுடன் தங்கிக் கொள்ளும்படி பல முறை கேட்டும் அவர் சுயமாகவே வாழ விரும்பினார். மன உறுதி கொண்ட அவர் எங்களை இப்படி சோகத்தில் ஆழ்த்துவார் என்று குடும்பத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை என்று சாரா தெரிவித்தார்.

துர்க்கா தேவி தற்போதைய காதலனுடனான உறவில் ஏற்பட்ட விரிசலினால் மனமுடைந்தது, தற்கொலைச் செய்து கொள்வதற்குத் தூண்டுதலாக இருந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Related News