Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா திட்டத்தை ஆதரிப்பதில் கேகே சூப்பர் மார்ட் தொடர்ந்து உறுதிப் பூண்டுள்ளது
தற்போதைய செய்திகள்

சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா திட்டத்தை ஆதரிப்பதில் கேகே சூப்பர் மார்ட் தொடர்ந்து உறுதிப் பூண்டுள்ளது

Share:

கோலாலம்பூர், ஜூலை.28-

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் அனைவருக்கும் மைகாட் மூலமாக 100 ரிங்கிட் சிறப்பு ரொக்கத் தொகை உதவி ஓன் ஓஃப் முறையில் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் வெளியிட்ட முன்முயற்சித் திட்டத்தை கேகே சூப்பர் மார்ட் வரவேற்றுள்ளது.

அரசாங்கத்தின் இந்த முன்முயற்சித் திட்டத்தில் பங்கு கொண்டுள்ள சில்லறை வணிக சகாக்களில் கேகே சூப்பர் மார்ட் மளிகைக் கடையும் ஒன்றாகும். வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் மலேசியர்கள் ஷாப்பிங் செய்வதற்கு கேகே சூப்பர் மார்ட் வழி வகுத்துள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி தொடக்கத்தில் எஸ்டிஆர் எனப்படும் சும்பாங்கான் தூனாய் ரஹ்மா, ஃபாசா ஒன்றில் வழங்கப்பட்ட உதவிக்கு பின்னர் சாரா எனப்படும் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா உதவித் திட்டத்திலும் உதவி தேவைப்படுகின்றவர்களுக்கு பலதரப்பட்ட உதவிகள் வழங்கப்படுவதானது, அரசாங்கத்தின் தொடர்ச்சியானப் பங்களிப்பைக் காட்டுகிறது.

இந்த முயற்சியின் மூலம், 24 மணி நேர வர்த்தகச் செயல்பாடு, பன்முகத்தன்மை மற்றும் ஒவ்வொரு வர்த்தக வளாகத்திலும் கிட்டத்தட்ட 6 ஆயிரம் பொருட்களைக் கொண்டுள்ள அதே வேளையில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் கேகே சூப்பர் மார்ட், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கான ஒரு தளமாக மக்களின் விருப்பத்திற்குரியத் தேர்வாக மாறியுள்ளது.

அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை சகாக்கள் நிறுவனங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மைகாசே முறையைப் பயன்படுத்துவதன் மூலம் எஸ்டிஆர் மற்றும் சாரா உதவித் திட்டப் பெறுநர்கள், ரொக்கமில்லா அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

எனவே கேகே சூப்பர் மார்ட்டைப் பொறுத்தவரை இந்த மைகாசே முறையை வழங்குவதற்குப் பொறுப்பான மைகாசே அறக்கட்டளை, மலேசியா முழுவதும் உள்ள பிற புதிய இடங்களுக்கு மைகாசே கேகே சூப்பர் மார்ட்டைச் சேர்க்கும் முயற்சிகளை மேலும் விரிவுபடுத்துவதில் கேகே சூப்பர் மார்ட்டுடன் ஒத்துழைக்க உறுதிப் பூண்டுள்ளது என்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News