Oct 9, 2026
Thisaigal NewsYouTube

82,637 சுகாதாரப் பணியார்களின் நல்வாழ்வுக்குக் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியாகும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
82,637 சுகாதாரப் பணியார்களின் நல்வாழ்வுக்குக் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியாகும்

கோலாலம்பூர், ஜூலை.11-

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் மற்றும் பொதுச் சேவைத் துறை, வாரத்திற்கு 45 மணி நேர ஷிப்ட் வேலையிலிருந்து 82 ஆயிரத்து 637 சுகாதார பணியாளர்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்து இருப்பது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும் என்று மேலவை உறுப்பினர் செனட்டர் டாக்டர் ஆர். ஏ. லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

இது உண்மையிலேயே நிம்மதி பெரும் மூச்சை ஏற்படுத்துகிறது என்று டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

தங்கள் நேரத்தைப் பொருட்படுத்தாமல் பல உயிர்களைக் காப்பாற்ற இரவும் பகலும் உழைக்கும் நமது சுகாதாரத்துறை பணியாளர்களின் தியாகங்கள், கஷ்டங்கள் மற்றும் விடாமுயற்சிக்கு இது ஒரு சிறந்த அங்கீகாரமாகும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் வர்ணித்தார்.

சுகாதார அமைச்சின் ஐந்து முக்கியச் சேவைத் திட்டங்களுக்கு வாரத்திற்கு 42 மணிநேர வேலை நேரத்தை நிர்ணயித்த நடவடிக்கையானது, முன் நிலை பணியாளர்களின் மனோநிலை, உடல்நிலை மற்றும் உணர்ச்சி நிறைந்த அவர்களின் நல்வாழ்விற்கு அரசாங்கம் எடுத்துக் கொண்டுள்ள அக்கறைக்குச் சான்றாகும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் புகழ்மாலை சூட்டினார். இது வெறும் எண்ணிக்கை அல்லது கொள்கைகள் தொடர்புடைய விஷயங்கள் அல்ல, மாறாக, மலேசிய மடானியை அடிப்படையாகக் கொண்ட மனிதநேயம் மற்றும் கருணையின் மதிப்பீட்டைப் பற்றியதாகும்.

இதற்காகப் போராடிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்ட டாக்டர் லிங்கேஸ்வரன், இந்த நடவடிக்கைக்கு அரசு ஊழியர்களைப் பாராட்டுவதற்கும், சிறந்த எதிர்காலத்திற்காக நாட்டின் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கும் அதிகமான முயற்சிகளின் தொடக்கமாக இது இருக்கும் என்று தாம் நம்புவதாக டாக்டர் லிங்கேஸ்வரன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி  ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை