போலீஸ்காரர்கள் அணியும் உடல் கேமராக்கள், பணியில் ஏற்படும் முறைகேடுகளைக் கணிசமாகக் குறைத்துள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநர் டத்தோ ஸ்ரீ யுஸ்ரீ ஹசன் பஸ்ரி தெரிவித்துள்ளார்.
இந்த கேமராக்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் முந்தைய காலத்தை விடக் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முன்வரிசைப் பணியாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் பதிவு செய்யப்படுவதால், அவர்கள் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற இது தூண்டுகிறது.
கேமரா பதிவுகள் நீதிமன்ற வழக்குகளில் முக்கிய ஆதாரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது காவல்துறையினர் மீதான தவறான புகார்களிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்கிறது என்பதையும் அவர் விளக்கினார்.
கடந்த ஆண்டு, 157 மாவட்டபோலீஸ் காவல்துறை தலைமையகங்கள் மற்றும் 640 காவல் நிலையங்களுக்கு 7,000-க்கும் மேற்பட்ட உடல் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.








