கோலாலம்பூர், ஜூலை.26-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவி விலக வேண்டும் என்று தாம் பிரார்த்தனைச் செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் உரையாற்றினார்.
அன்வார் ஆட்சியில் மக்கள் துன்பப்படுகிறார்கள். மக்களை முறையாக வழிநடத்த ஒற்றுமை அரசாங்கத்தினால் முடியவில்லை. மக்களைத் திருப்திபடுத்த 100 ரிங்கிட் உதவித் தொகையை அறிவித்துள்ளது.
மக்களின் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்து வரும் வேளையில் சாமானிய மக்கள் இந்த 100 ரிங்கிட்டைக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று டத்தாரான் மெர்டேக்கா முன்புறம் துருன் அன்வார் பேரணியில் உரையாற்றுகையில் பெர்சத்து கட்சியின் துணைத் தலைவருமான ஹம்ஸா ஸைனுடின் கேள்வி எழுப்பினார்.








