Oct 9, 2026
Thisaigal NewsYouTube

சட்டத்துறை மற்றும் எஸ்பிஆர்எம் சீர்திருத்தங்களைக் கோரியது லஞ்ச எதிர்ப்புச் செயலகம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சட்டத்துறை மற்றும் எஸ்பிஆர்எம் சீர்திருத்தங்களைக் கோரியது லஞ்ச எதிர்ப்புச் செயலகம்

கோலாலம்பூர், ஜூன்.29

நேற்று பிற்பகலில் கோலாலம்பூர் மாநகரில் திரண்ட 2.0 லஞ்ச எதிர்ப்பு மக்கள் செயலகம், இரண்டு முக்கிய விவகாரங்களை முன்னிறுத்தி, அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

நீதித்துறையின் அடிப்படையாக விளங்கும் சட்டத்துறை மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் ஆகியவற்றில் அந்தச் செயலகம், சீர்திருத்தங்களைக் கோரியுள்ளது.

சட்டத்துறையில், சட்டத்துறை அலுவலகம் மற்றும் ஓபிபி எனப்படும் பிராசிகியூஷன் அலுவலகம் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை அந்தச் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தவிர நாட்டின் லஞ்ச வேர்களை வேரறுக்கும் முக்கியப் பணியை மேற்கொண்டு வரும் எஸ்பிஆர்எம், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஒரு சுயேட்சை பரிபாலனமாகச் செயல்பட வேண்டும். அத்துடன் எஸ்பிஆர்எம் தனது பணிகளைச் செம்மையுறக் கடமையாற்றுவதற்கு அதற்குத் தன்னாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அந்தச் செயலகம் கோரியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →