கோத்தா பெலுட், மே.17-
சபா மாநிலம் கோத்தா பெலுட் பகுதியில் உள்ள Polumpung Melangkap Baru முகாமருகே ஆற்றில் மூழ்கிய இரு சகோதரர்களில் இரண்டாவது நபரின் உடலும் இன்று மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தேடுதல் நடவடிக்கை நிறைவடைந்ததாக மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் இயக்குநர் Elge Bakuk தெரிவித்துள்ளார்.
18 வயதான Daniel Abdullah என்பவரின் உடல், அவர் நீந்திய இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இன்று மதியம் 12.04 மணியளவில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அவரது உடலானது போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நேற்று நடந்த இந்த சம்பவத்தில், பலத்த நீரோட்டத்தில் சிக்கிய Daniel-ஐ காப்பாற்ற முயன்ற அவரது 23 வயது சகோதரர் Zul Hakim Abdullah ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
அவரது உடல் சம்பவ இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் நேற்று காலை மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








