Oct 14, 2026
Thisaigal NewsYouTube

அந்நிய நாணய வர்த்தகத்தில் வர்த்தகரை ஏமாற்றியதாக மாது மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாலம்பூர், பிப்.19-

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அந்நிய நாணய வர்த்தகத்தில் 5 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான வர்த்தகத்தில் தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றியதாக மாது ஒருவர் கோலாலம்பூர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

37 வயது L. கார்த்திகா என்ற அந்த மாது, தொழில் அதிபர் P. சுரேஷ் குமார் என்பவரை ஏமாற்றியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜுலை 19 ஆம் தேதி, கோலாலம்பூர், டாங் வங்கியில் உள்ள ஒரு Condominiun அடுக்குமாடி வீட்டில் கார்த்திகா இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 5 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் கார்த்திகா குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இவ்வழக்கில் பிராசிகியூஷன் தரப்பில் துணை பப்ளிக் பிராசிகியுட்டர் எம். சரவணன் ஆஜராகிய வேளையில் கார்த்திகா சார்பில் வழக்கறிஞர் எஸ். செல்வகுமரன் ஆஜராகினார்.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து கார்த்திகா விசாரணை கோரியதைத் தொடர்ந்து அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 15 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிபதி அஸ்ருல் டாருஸ் அனுமதி அளித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்