Oct 5, 2026
Thisaigal NewsYouTube

ஒழுங்கீன நடவடிக்கை: நான்கு அந்நிய நாட்டுப் பெண்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒழுங்கீன நடவடிக்கை: நான்கு அந்நிய நாட்டுப் பெண்கள் கைது

ஜோகூர் பாரு, அக்டோபர்.02-

ஜோகூர் மாநிலம் விபச்சார நடவடிக்கையிலிருந்து விடுபட்ட மாநிலமாக உருவாக்கும் நோக்கில் தற்போது தொடங்கப்பட்டுள்ள ஓப்ஸ் கெகார் நடவடிக்கையில் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் நான்கு வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில குடிநுழைவு இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்தார்.

ஜோகூர் பாருவில், கெபுன் தே அருகில் உள்ள பட்ஜெட் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட சோதனையில் இவர்கள் பிடிப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 29 க்கும் 39 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஒரு பிலிப்பைன்ஸ் பிரஜை மற்றும் 3 லாவோஸ் பிரஜைகள் கைது செய்யப்பட்டு , செத்தியா டுரோப்பிக்கா குடிநுழைவுத் தடுப்பு முகாமிற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →