இன்று ஹஜ்ஜுப் பெருநாள் பொது விடுமுறையையொட்டி பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் குறைந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாகியுள்ளது. வாகனங்கள் பழுதடைந்தது, விபத்து போன்ற காரணங்களினால் நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வடக்கு தெற்கு நெடுஞ்சாலை வாரியமான பிளஸ் அறிவித்துள்ளது.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 155.3 ஆவது கிலோ மீட்டரில் பினாங்கு ஜாவியில்யில் இருந்து பண்டார் சேசிய ரிவர் வரையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பிளஸ் தெரிவித்துள்ளது. இதே போன்று வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 263.4 ஆவது கிலோமீட்டரில் ஈப்போ சுரங்கப்பாதைக்கு அருகில் பேருந்து பழுதடைந்ததன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


