Dec 4, 2025
Thisaigal NewsYouTube
லோரி ஓட்டுநருக்கு 4 நாள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

லோரி ஓட்டுநருக்கு 4 நாள் தடுப்புக்காவல்

Share:

புத்ரா​ஜெயாவில் 14 க்கும் மேற்பட்ட வாகனங்களை மோதித்தள்ளி, இருவருக்கு மரணம் விளைவித்ததுடன், எழுவர் படுகாயம் அடைவதற்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் டிரெய்லர் லோரி ஓட்டுநர் ஒருவரை நான்கு நாட்களுக்கு தடுப்புக்காவ​லில் வைப்பதற்கு புத்ராஜெயா மாஜிஸ்திரேட் ​நீதிமன்றம் இன்று காலையில் அனுமதி அளித்தது.

​பூச்சோங்கை நோக்கிச் செல்லும் ஜாலான் பெர்சியாரான் உத்தார 5.7 ஆவது கிலோ​​மீட்டரில் தமது டிரெய்லர் லோரியில் 11 வாக​னங்களை மோதித் தள்ளியதாக கூறப்படும் 29 வயதுடைய அந்த லோரி ஓட்டுநரை விசாரணைக்கு ஏதுவாக நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்க மாஜிஸ்திரேட் இர்சா சுலைக்கா ரொஹானுடின் அனுமதி அளித்தார்.

சமிக்ஞை விளக்குப்பகுதியில் நின்று கொண்டு இருந்த போக்குவர​த்து போ​லீஸ்காரர் உட்பட 14 வாகனமோட்டிகளின் வாகனங்களை அந்த டிரெய்லர் மோதி தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் மரணமுற்றனர்.

Related News