நாட்டில் புகைமூட்டம் தொடர்ந்து மோசமடையுமானால், பள்ளிகள் மூடப்பட வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து சுகாதார அமைச்சிடம், ஆலோசனைப் பெறப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு வழங்கக்கூடிய ஆலோசனையை பொறுத்தே பள்ளிகள் மூடப்பட வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் விளக்கினார.
நாட்டில் 16 பகுதிகளில் புகைமூட்டம் மோசமடைகிறது என்பதற்கு அப்பகுதியில் பதிவாகியுள்ள காற்றின் தூய்மைக்கேட்டின் குறியீடு காட்டுவதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் ஃபட்லினா சிடெக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


