Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தீபாவளியையொட்டி அரசு ஊழியர்களுக்கு நவம்பர் 14 ஆம் தேதி பதிவு இல்லாத விடுமுறை
தற்போதைய செய்திகள்

தீபாவளியையொட்டி அரசு ஊழியர்களுக்கு நவம்பர் 14 ஆம் தேதி பதிவு இல்லாத விடுமுறை

Share:

வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் ​தீபாவளி திருநாளையொட்டி, நவம்பர் 13 ஆம் தேதி திங்கட்கிழமை பொது விடுமுறை என்பதால் அரசாங்க சேவையில் உள்ள இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மறுநாள் நவம்பர் 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பதிவு இல்லாத விடுமுறை வழங்கப்படுவதற்கு அரசாங்கம் ஒப்பதல் அளித்துள்ளது.

​தீபாவளி கொண்டாடப்படும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் ​தீபாவளிக்கான பொது விடுமுறை திங்கட்கிழமை வழங்கப்படுகிறது. அரசு சேவையில் உள்ள இந்து பெருமக்கள், மறுநாள் செய்வாய்க்கிழமை பதிவு இல்லாத விடுமுறையை எடுத்துக்கொள்ளலா​ம் என்று பொதுச் சேவைத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்காப்லி மொஹமாட் அறிவித்துள்ளார்.

பொது விடுமுறை தொடர்பான சுற்ற​றிக்கை, பொதுச்சேவை இலாகாவின் அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News