இடைநிலைப்பள்ளி மாணவன் தி. நவீன் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட அந்த ஐந்து இந்திய இளைஞர்களும் மீண்டும் கைது செய்யப்பட வேண்டும் என்று அந்த நவீன் குடும்பத்தினர் இன்று சட்டத்துறை தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நவீனை கொலை செய்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த அந்த ஐந்து நபர்களுக்கும் தண்டனை அளிக்கும் வகையில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, பினாங்கு உயர் நீதிமன்றம் விடுதலை செய்த போதிலும், தற்போது இந்த கொலை வழக்கில் தீர்ப்பை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளதால் அந்த ஐந்து பேரும் மறுபடியும் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட வேண்டும் என்று நவீன் குடும்பத்தினர் சார்பில் இவ்வழக்கில் பங்கேற்றுள்ள அருண் துரைசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.








