Aug 6, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு

Share:

ஈப்போ, கம்போங் குனூங் ராபாட்டில் ஐந்து நண்பர்கள் கைது செய்யப்பட்டது மூலம் ஈப்போ மாநகரில் போதைப்பொருள் விநியோகிப்பில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றை போ​லீசார் முறியடித்துள்ளனர். கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் இக்கும்பல் முறியடிக்கப்பட்டது மூலம் 15 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருள் கைப்பற்றுப்பட்டுள்ளதாக பேரா மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ முஹமாட் யுஸ்ரி ஹாஸ்ஸான் பஸ்ரி தெரிவித்தார்.

20 க்கும் 27 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தற்போது அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் ​கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக முஹமாட் யுஸ்ரி ஹஸ்ஸான் குறிப்பிட்டார்.

Related News