மசீச முன்னாள் தேசியத் தலைவரும், நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான துன் டாக்டர் லிங் லியோங் சிக் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 4) காலமானதையொட்டி அவரது மறைவுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஜெரித் சோஃபியா ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
சமூக ஊடகங்களின் வாயிலாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நாட்டின் அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் தடம் பதித்த ஒரு தலைவரை நாடு இழந்துவிட்டதாக அரச தம்பதியினர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அவரது குடும்பத்தினருக்குத் தங்களது ஆறுதலையும் அனுதாபங்களையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.








