கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் இரும்புத் தூணில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். இச்சம்பவம் நேற்று இரவு 8.20 மணியளவில் ஜோகூர்பாரு, இஸ்தானா பெலாங்கி முன்புறம் நிகழ்ந்தது.
சின்னபின்னாமான காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய அந்த ஆடவரின் உடலை மீட்பதற்கு லார்கின் தீயணைப்பு,மீட்புப்படையைச் சேர்ந்த 14 வீரர்கள் சுமார் அரை மணி நேரம் கடுமையாக போராடினர்.
மிட்சுபிஷி லான்சர் ரக காரில் பயணித்தவரான 27 வயதுடைய அந்த ஆடவரின் உடல், புலன் விசாரணைக்கு ஏதுவாக பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.








