குடியுரிமை தொடர்புடைய எந்தவொரு சட்டத்திருத்தத்தையும், நாடாளுமன்றம் அங்கீகரிப்பதற்கு முன்னதாக அரசாஙகம் மிக கவனமாக ஆராய வேண்டும் என்று சமூக போராட்டவாதியும், மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவருமான் அம்பிகா ஸ்ரீனிவாசன் கேட்டுக்கொண்டார்.
எதிர்காலத்தில் சிக்கல்கள் தோன்றுவதை தவிர்ப்பதற்கு குடியுரிமை தொடர்புடைய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமனற்த்திற்கு கொண்டு செல்வதற்கு முன்னதாக அது குறித்து விரிவான ஆய்வை புத்ராஜெயா மேற்கொள்ள வேண்டும் என்று அம்பிகா வலியுறுத்தினார்.
இந்த சட்டத்திருத்தம் எந்த வகையிலும் குரியுரிமை தொடர்பான அடிப்படை உரிமைகளை பறிப்பதாக இருக்கக்கூடாது என்பதை எல்லா நிலைகளிலும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று சட்ட வல்லுநரான அம்பிகா கேட்டுக்கொண்டார்.








