Dec 8, 2025
Thisaigal NewsYouTube
திவெட் புரட்சி: மூன்று தேசிய நிபுணத்துவ சான்றிதழ்களுடன் அறிமுகம் 652 சட்டத் திருத்தம்
தற்போதைய செய்திகள்

திவெட் புரட்சி: மூன்று தேசிய நிபுணத்துவ சான்றிதழ்களுடன் அறிமுகம் 652 சட்டத் திருத்தம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.08-

மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தாக்கல் செய்த 2025 ஆம் ஆண்டுக்கான 652 தேசிய திறன் மேம்பாட்டுச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத் திருத்த மசோதா, 'திவெட் புரட்சியின்' ஒரு முக்கியப் பகுதியாகும்.

இது மூன்று வகை தேசிய நிபுணர் சான்றிதழ்களை அறிமுகப்படுத்துகிறது. உள்ளூரைச் சேர்ந்த திறமையான பணியாளர்களின் விரிவான அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை முதன் முறையாக அங்கீகரிப்பதற்காக, 'திறன் நிபுணர்', ‘முதிர் நிலை திறன் நிபுணர்' மற்றும் 'திறன் ஆலோசகர்' ஆகிய மூன்று புதிய தேசிய நிபுணர் சான்றிதழ்கள் இந்தச் சட்டத் திருத்த மசோதா வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தொழில்நுட்பம், ஆட்டோமேஷன் மற்றும் எதிர்கால தொழில்துறை கோரிக்கைகளால் இயக்கப்படும் பொருளாதாரத்தின் தேவைகளுக்கு ஏற்ப, நாட்டின் திறமையான பணியாளர் நிபுணத்துவ சூழல் அமைப்பை போட்டித்தன்மையுடனும் பொருத்தமானதாகவும் வலுப்படுத்த மனித வள அமைச்சு மூலம் மடானி அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இது வலியுறுத்துகிறது.

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள சட்டம் 652, திறன் அங்கீகாரத்தை விரிவுபடுத்துவதற்கும் பயிற்சி வழங்குநர்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும் 15 திருத்த உட்பிரிவுகள் மூலம் இப்போது பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தங்கள் திறன் மேம்பாட்டுத் துறை, செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன், பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் தொழில்துறை உள்ளிட்ட புதிய தொழில்களின் தேவைகளுக்கு பொருத்தமானதாகவும் பதிலளிக்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதிச் செய்கிறது என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் சுட்டிக் காட்டினார்.

பயிற்சி வழங்குநர்களுக்கான அங்கீகாரக் காலம் 3 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக நீட்டிக்க இந்தச் சட்டத் திருத்த மசோதா வகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News