May 4, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் பதவிக்கான கால வரம்பு என்னிடமிருந்தே தொடங்கும் - அன்வார் இப்ராஹிம்
தற்போதைய செய்திகள்

பிரதமர் பதவிக்கான கால வரம்பு என்னிடமிருந்தே தொடங்கும் - அன்வார் இப்ராஹிம்

Share:

கோல லங்காட், பிப்ரவரி.20-

பிரதமர் பதவிக் காலத்தை வரையறுப்பதற்கு முன்மொழியப்பட்ட சட்டம், முதன் முதலில் தனக்கே பொருந்தும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை கோல லங்காட், Masjid Kampung Seri Cheeding பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் , "இந்த கால வரம்பு, என்னிடமிருந்தே தொடங்குகிறது. நான் மற்றவர்களுக்காக சட்டத்தை உருவாக்க மாட்டேன். அந்தச் சட்டம் முதலில் எனக்கே பொருந்த வேண்டும், என்று கூறினார்.

பிரதமரின் பதவிக் காலத்தை இரண்டு தவணை காலமாக கூடியபட்சம் 10ஆண்டுகளாக நிர்ணயிப்பதற்கு இந்த சட்டம் வகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News