AIA காப்பறுதி நிறுவனத்திலிருந்து அதன் முகவரும், உதவி யூனிட் நிர்வாகியுமான தர்மராஜா கணேசன் என்பவர் நீக்கப்பட்டுள்ளதால் அந்த நிறுவனத்துடன் தொடர்புபடுத்தக்கூடிய எந்தவொரு அலுவல் விவகாரத்தையும் சம்பந்தப்பட்ட நபருடன் மேற்கொள்ள வேண்டாம் என்று பொது மக்களை AIA நிறுவனத்தின் வட்டார நிர்வாகியும், United Champion Resourses நிறுவனத்தின் தோற்றுநருமான பொன்னுதுரை குப்புசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
நெகிரி செம்பிலான், தாமான் பெர்மை 3, ஜாலான் கெராபு 14 என்ற முகவரியைச் சேர்ந்த தர்மராஜா, AIA காப்புறுதி நிறுவனத்துடன் தொடர்புபடுத்தக்கூடிய பாலிதாரரின் பணத்தில் முறைகேடு புரிந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் AIA நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொன்னுதுரை குப்புசாமி குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் AIA நிறுவனத்தையோ அல்லது United Champion Resourses நிறுவனத்தையோ பிரதிநிதித்து பாலிசிதாரரிடம் பணம் வசூலிக்கவோ, பாலிசிகளை விற்பனை செய்யவோ பாலிசிதாரர்கள் சம்பந்தப்பட்ட அலுவல்களை மேற்கொள்ளவோ அவருக்கு இனி அதிகாரமில்லை என்று பொது மக்களுக்கு தெரிவித்துக்கொள்வதாக பொன்னுதுரை குப்புசாமி தெரிவித்துள்ளார்.
AIA காப்புறதி நிறுவனத்திலிருந்து தர்மராஜா கணேசன் நீக்கப்பட்டது குறித்து லியாம் எனப்படும் மலேசிய ஆயுள் காப்புறுதி நிறுவனத்திடமும் கடிதம் வாயிலாக AIA நிறுவனம் தெரிவிக்கவிருப்பதாக பொன்னுதுரை குப்புசாமி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தர்மராஜா கணேசன் எதிராக மேற்கொள்ளப்பட்ட பணி நீக்க நடவடிக்கைக்கு தமது தலைமையிலான United Champion Resourses நிறுவனத்தின் மீது தொடர்ந்து அவதூறு கூறி வருவாரேயானால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று 150 க்கும் மேற்பட்ட முகவர்களை வழிநடத்தி வரும் பொன்னுதுரை குப்புசாமி நினைவுறுத்தியுள்ளார்.








