Oct 17, 2026
Thisaigal NewsYouTube

போதைப்பொருளுடன் இரண்டு ஆடவர்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போதைப்பொருளுடன் இரண்டு ஆடவர்கள் கைது

மீரி, நவ.8-


தீபகற்ப மலேசியாவிலிருந்து விமானத்தில் கிட்டத்தட்ட 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளுடன் மீரி விமான நிலையத்தில் வந்திறங்கிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்டபட்டனர்.

இச்சம்பவம் கடந்த நேற்று முன்தினம் புதன்கிழமை நிகழ்ந்தது. அந்த இரண்டு நபர்களும் விமான நிலையத்திலேயே சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது தெரியவந்துள்ளதாக சரவா மாநில போலீஸ் கமிஷனர் டத்தோ மஞ்சா அனாக் அதா தெரிவித்தார்.

36 வயது நபர், முந்திய குற்றப்பதிவுகளை கொண்டிருக்கவில்லை. 43 வயதுடைய இரண்டாவது நபர் போதைப்பொருள், வீடு புகுந்து திருடியது முதலிய குற்றப்பதிவுகளை கொண்டு இருப்பது தெரியவந்ததுள்ளது.

அந்த இருவரும் அதிகாரிகளின் கண்களை மறைத்து 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளை எவ்வாறு விமானத்திற்குள் கொண்டு வந்தனர் என்பது தற்போது ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →