விபத்து ஏற்படும் அளவிற்கு மிக அபாயகரமாக காரை செலுத்தியதாக நம்பப்படும் நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் மாநகரிலிருந்த மிட்வேளி வாயிலாக ஜாலான் ஷேட் புத்ரா வை நோக்கி ஆபத்தை விளைவிக்கும் தன்மையில் காரை செலுத்திய 26 வயது நபர் இன்று பிற்பகல் 3 மணியளவில் கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டதாக அதன் தலைவர் ஏசிபி சரிபுதீன் முகமது சலே தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள் வழித்தடத்தில் படுவேகமாக காரை செலுத்திய அந்த நபர், திடீரென்று பிரேக் போட்டதால் பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டி அந்த காரில் மோதி படுகாயத்திற்கு ஆளானதாக ஏசிபி சரிபுதீன் குறிப்பிட்டார்.








