செர்டாங், செப்டம்பர்.04-
மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பலாப்ஸ் ( Palapes) பயிற்சியாளர் ஷம்சுல் ஹரிஸ் ஷம்சுடின் மரணம் குறித்து யாரும் யூகங்களைப் பரப்ப வேண்டாம் என தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
ஷம்சுலின் இரண்டாம் சவப் பரிசோதனையின் முழுமையான முடிவுகள் வெளிவரும் வரை, அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்கும் படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் உள்ளிட்ட தனிநபர்களிடம் ஆயுதப்படை அதிகாரிகள், விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் பயிற்சியின் போது எந்தவொரு துன்புறுத்தலும் அந்த பயிற்சி மாணவருக்கு நடக்கவில்லை என்பது உறுதியாகியிருப்பதாக காலிட் நோர்டின் குறிப்பிட்டுள்ளார்.








