Dec 2, 2025
Thisaigal NewsYouTube
PEMANGIN திட்டம் மூலம் 100 கோடி வெள்ளி முதலீட்டை கவரலாம்
தற்போதைய செய்திகள்

PEMANGIN திட்டம் மூலம் 100 கோடி வெள்ளி முதலீட்டை கவரலாம்

Share:

PEMANGIN திட்டம் மூலம் ஒன்பது முக்கியத் துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டிற்குள் இதன் மூலம் 100 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீட்டைக் கவர முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக தொடர்பு மற்றும் இலக்கவியல் துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.

இலக்கவியல், விவசாயம், இலக்கவியல் சுற்றுலா, இலக்கவியல் உள்ளடக்கம், இலக்கவியல் சுகாதாரம், இலக்கவியல் நகரங்கள், இலக்கவியல் நிதி, இலக்கவியல் சேவை, இலக்கவியல் வர்த்தகம் மற்றும் இஸ்லாமிய இலக்கவியல் பொருளாதாரம் ஆகியவையே அந்த ஒன்பது துறைகாகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஒட்டுமொத்தமாக மலேசிய பொருளாதார இலக்கவியல் அமைப்பான MDEC மூலம் அரசாங்கம் 12 ஆவது மலேசியத் திட்டத்தின் வரவு செலவுத் தாக்கலில் மொத்தம் 23 கோடியே80 லட்சம் வெள்ளியை பொது முதலீடாக ஒதுக்கியுள்ளது என்று துணை அமைச்சர் தியோ நீ சிங் குறிப்பிட்டார்.

PEMANGIN இன் கீழ் உள்ள ஒன்பது துறைகளின் மூலம் இலக்கவியல் உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் இலக்கவியல் பொருளாதார திறன்களை மக்களுக்கு வழங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது என்று தியோ நீ சிங் தெரிவித்தார்.

Related News