இஸ்கண்டார் புத்ரி, ஜூலை.29-
இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் பெண் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணியளவில் ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி, ஜாலான் கெலாங் பாத்தா-பெண்டாஸ் சாலையின் 28 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
தாமான் யுனிவர்சிட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 37 வயது கோப்பரல் ஃபைருஸ்ஃபட்லா மூசா என்பரே இந்தச் சம்பவத்தில் மாண்டதாக இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எம். குமரேசன் தெரிவித்தார்.
கெலாங் பாத்தாவிலிருந்து ஸ்கூடாயை நோக்கி அந்த பெண் போலீஸ்காரர் புரோட்டோன் சாகா காரில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த புரோட்டோன் வாஜா காரினால் மோதப்பட்டுள்ளார் என்று பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஏசிபி குமரேசன் குறிப்பிட்டார்.








