Jul 29, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு வீடுகள் எரிந்ததில் ஆடவர் காயம்
தற்போதைய செய்திகள்

இரண்டு வீடுகள் எரிந்ததில் ஆடவர் காயம்

Share:

கோலாலம்பூர்,ஜன.22
ஜின்ஜாங் உத்தார, ஜாலான் பெந்தெங் பாராட்டில் உள்ள இரண்டு வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆடவர் ஒருவர் கையில் தீக்காயம் அடைந்தார்.

இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 7:45 மணியளவில் கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து 40 தீயணைப்பு, மீட்பு படையினர் அவ்விடத்திற்கு விரைந்ததாக கோலாலம்பூரில் உள்ள மலேசிய தீயணைப்பு, மீட்பு படை (JBPM) - யின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

தீ மற்ற வீடுகளில் பரவாமல் இருப்பதை தடுப்பதற்கு தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்விபத்தில் ஒரு வீடு 90 சதவீதமும் மற்றொரு வீடு 70 சதவீதமும் தீயில் சேதமடைந்ததாக அறியப்படுகிறது.

இச்சம்பவத்தில் 44 வயதுடைய ஆடவர் ஒருவருக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டு செலயாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

தீ ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது