Dec 4, 2025
Thisaigal NewsYouTube
எல்லா அமலாக்கப் பிரிவும் அரிசி உற்பத்தியாளர்களையும் மொத்த வியாபாரைகளையும் சோதனை செய்யலாம்
தற்போதைய செய்திகள்

எல்லா அமலாக்கப் பிரிவும் அரிசி உற்பத்தியாளர்களையும் மொத்த வியாபாரைகளையும் சோதனை செய்யலாம்

Share:

நாடு முழுவதுஜ் அனைத்து அமலாக்கப் பிரிவினரும் அரிசி உற்பத்தியாளர்களையும் மொத்த விற்பனையாளர்களையும் சோதனை செய்யலாம் என வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு துணை அமைச்சர் சான் ஃபூங் ஹின் தெரிவித்தார்.

அரிசி, நெல் ஒழுங்கு முறைச் சட்டம் 1994 பிரிவு 6இன் படி இந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என அவர் விளக்கினார்.

இந்த சோதனை நடவடிக்கை தொடர்பாக வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சில் ஒருங்கிணைந்த செயலகத்தை உருவாக்குவதோடு முன்னதாகக் குறிப்பிட்டச் சட்டப்படி அமைச்சின் அதிகாரத்தை அனைத்து வகை அமலாக்கப் பிரிவுக்கும் வழங்குவதாக இன்று அவ்வமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சான் ஃபூங் ஹின் தலைமையில் ஒரு பணிக்குழுவை உருவாக்கி பச்சரிசி தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என கடந்த திங்கட்கிழமை அமைச்சர் டத்தோ செரி முஹமாட் சாபு அறிவித்திருந்தார்.

இந்தச் சோதனையில் பச்சரிசி, நெல் ஒழுங்குமுறை அமைப்பு கேபிபி, உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சு கேபிடிஎன் அரச மலேசியக் காவல் துறை பிடிஆர்எம், அரச மலேசிய சுங்கத் துறை ஜேகேடிஎம், மலேசிய தனிமைப்படுத்தல், சோதனை சேவை திணைக்களம் மகிஸ் ஆகிய அமலாக்கப் பிரிவுகள் ஈடுபடும்.

இன்று தொடங்கிய அந்தச் சோதனை நடவடிக்கையில் 93 தொழிற்சாலைகள், 130 மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் ஆகியோரோடி நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் முக்கிய துறைமுகங்களிலும் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சு குறிப்பிடுகிறது.

Related News