மலாக்கா, டிசம்பர்.17-
மலாக்கா, டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதை சட்டத்துறை அலுவலகம், கொலையாக வகைப்படுத்திய போதிலும் தாம் எந்த அச்சத்தையும் கொண்டு இருக்கவில்லை என்று மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தினால் போலீஸ் அதிகாரிகளான நாங்கள் எந்த அழுத்தத்தையும் உணரவில்லை. வழக்கம் போல் எங்கள் பணிகளைச் செய்து வருகிறோம். கடமைகளை நிறைவேற்றி வருகிறோம். இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று மலாக்காவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஸுல்கைரி முக்தார் குறிப்பிட்டார்.
இவ்விவகாரத்தில் தாங்கள் எதற்கும் அஞ்சப் போவதில்லை என்று அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.








